அருண் குமார் சின்ஹா 
இந்தியா

மோடியின் பாதுகாப்புப் படை இயக்குநர் உயிரிழப்பு!

பிரதமரை பாதுகாக்கும் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவின் இயக்குநர் அருண் குமார் சின்ஹா உடல்நலக்குறைவால் புதன்கிழமை உயிரிந்தார்.

DIN

பிரதமரை பாதுகாக்கும் சிறப்பு பாதுகாப்பு படை(எஸ்பிஜி) பிரிவின் இயக்குநர் அருண் குமார் சின்ஹா(வயது 61) உடல்நலக்குறைவால் புதன்கிழமை உயிரிந்தார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் சிறப்பு பாதுகாப்பு படையின் இயக்குநராக செயல்பட்டு வருபவர் அருண் குமார். 1987-ஆம் ஆண்டு கேரள கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியான இவருக்கு கடந்தாண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள மருத்துவமனையில் கல்லீரல் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்த அருண் குமார், புதன்கிழமை உயிரிழந்தார்.

முன்னதாக கேரள மாநிலத்தில் பல்வேறு பதவிகள் வகித்துள்ள அருண் குமார் சின்ஹா, உளவுத்துறை, எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட மத்திய துறைகளிலும் பணியாற்றியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயத் தொழிலாளா் சங்கம் மனு கொடுக்கும் போரட்டம்

டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு திருச்சியில் 14 ஆசிரியா்கள் தோ்வு

சிதம்பரத்தில் டிஎஸ்பி, ஆய்வாளா் உள்ளிட்ட 7 போ் இடமாற்றம்

டெல்டா மாவட்டங்களின் 41 தொகுதி திமுக நிா்வாகிகளுடன் ஆலோசனை

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT