இந்தியா

பெங்களூருவில் 2 மாதங்களில் 3,200 பேருக்கு டெங்கு பாதிப்பு!

பெங்களூரில் கடந்த இரண்டு மாதங்களில் 3,200 க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாயினர் என்று சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

DIN

பெங்களூரு: பெங்களூரில் கடந்த இரண்டு மாதங்களில் 3,200 க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாயினர் என்று சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். மேலும் வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு பெங்களூரு மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் முறையே 1,649 மற்றும் 1,590 டெங்கு நோயாளிகள் கண்டறியப்பட்டனர். செப்டம்பர் மாதத்தில் இதுவரை 416 வழக்குகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இது குறித்து அமைச்சர் தினேஷ் குண்டுராவ்  செய்தியாளர்களிடம் கூறுகையில், தேங்கியுள்ள மழை நீர் காரணமாக பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. வைரஸைக் எடுத்து செல்லும் கொசுக்களை ஒலிக்க பெங்களூரில் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. டெங்குவை கட்டுப்படுத்த அதிக அளவில் பணியாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த மாதம் பாதிப்பு அதிகரித்துள்ளது. நாங்கள் அதை தீவிரமாக எடுத்துக் கொண்டோம். இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளேன்.

இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சியின் 6 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் டெங்கு பரிசோதனைகளை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். துணை செவிலியர்கள், மருத்துவச்சிகள் மற்றும் சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறை குறித்து பேசிய அமைச்சர், அவர்களின் ஊதியத்தை மாதத்திற்கு ரூ.12,000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

ஆரணியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT