இந்தியா

ஜி20: இந்தியா வந்தடைந்தார் பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்

DIN

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் இந்தியா வந்தடைந்தார். 

ஜி-20 மாநாடு தில்லியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்.9, 10) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா உள்பட 20 நாடுகளின் முக்கியத் தலைவா்கள் வருகை தர உள்ளதால் தலைநகா் தில்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜி20யில் அங்கம் வகிக்கும் ரஷிய அதிபா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. சீன அதிபருக்கு பதில் பிரதமா் லி கியாங், ரஷிய அதிபருக்கு பதில் வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் பங்கேற்பாா்கள் என்று அறிவித்துள்ளனா். இந்த நிலையில் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் இன்று இந்தியா வந்தடைந்தார். 

உடன் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் வந்துள்ளார். தில்லி விமான நிலையில் பிரிட்டன் பிரதமர் மற்றும் அவரது மனைவியை மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் வரவேற்றார். கடந்த ஆண்டு அக்டோபரில் பிரதமராக பதவியேற்ற பிறகு ரிஷி சுனக் இந்தியா வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத் தாமரை மகளே...!

சர்வதேச நீதிமன்றத்தின் அதிகாரத்தை நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை: இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர்!

இந்தப் புகைப்படத்தை எடுத்தது யார் தெரியுமா?

குவாலிஃபையர் - 1 போட்டிக்கு கேகேஆர் தயார்...

வங்கதேச எம்.பி., கொல்கத்தாவில் மாயம்!

SCROLL FOR NEXT