கோப்புப்படம் 
இந்தியா

ஆன்மிக சுற்றுலா சென்றவர்களின் பேருந்து விபத்து: 20 பேர் காயம்!

மேற்கு வங்க மாநிலம் மேதினிபூரில் இருந்து சென்ற சுற்றுலாப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20 பேர் காயமடைந்தனர். 

DIN

மேற்கு வங்க மாநிலம் மேதினிபூரில் இருந்து சென்ற சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20 பேர் காயமடைந்தனர். 

மேதினிபூரில் இருந்து 60 பயணிகளை ஏற்றுச் சென்ற தனியார் சுற்றுலாப் பேருந்து பரேலி-லக்னௌ தேசிய நெடுஞ்சாலையில் ஜங் பகதூர் கஞ்ச், அல்லிபூர் கிராமத்திற்கு அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 20 பேர் சிகிச்சைக்காக அருகிலுள்ள ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

பெண் ஒருவருக்கு தலையில் பலத்த காயமடைந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி புறப்பட்ட சுற்றுலாப் பயணிகள் கயா, புத்தகயா, பிரயாக்ராஜ், சித்ரகூட், பிருந்தாவனம், ஹரித்வால் ஆகிய இடங்களுக்குச் சென்றுவிட்டு அயோத்தி மற்றும் வாராணசிக்குச் சென்று கொண்டிருந்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT