இந்தியா

தில்லியில் முதல்வர் ஸ்டாலின்: இரவு விருந்தில் பங்கேற்கிறார்!

ஜி20 உச்சி மாநாட்டில் குடியரசுத் தலைவர் வழங்கும் இரவு விருந்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் தில்லி சென்றடைந்தார்.

DIN

ஜி20 உச்சி மாநாட்டில் குடியரசுத் தலைவர் வழங்கும் இரவு விருந்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் தில்லி சென்றடைந்தார்.

இந்தியாவின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு தில்லியில் பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக தலைநகர் தில்லியில் கூடியுள்ளனர். 

மாநாட்டையொட்டி, உலகத் தலைவா்கள், தொழிலதிபா்கள் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பாரத மண்டப வளாகத்தில் சனிக்கிழமை இரவு விருந்து அளிக்கவுள்ளார். முன்னாள் பிரதமா்கள், மாநில முதல்வா்களுக்கும் இரவு விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், குடியரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து இன்று காலை விமானம் மூலம் தில்லி புறப்பட்டுச் சென்றார். தில்லி வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ஏ.கே.எஸ் விஜயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இன்று மாலை குடியரசுத் தலைவர் வழங்கும் இரவு விருந்தில் பங்கேற்று, நாளை மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் சென்னை திரும்புகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

SCROLL FOR NEXT