ஜி20 மாநாட்டின் முதல் நாள் நிறைவாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அளிக்கும் இரவு விருந்து நிகழ்ச்சிக்கு தலைவர்கள் வருகைதரத் தொடங்கினர்.
தில்லி பாரத் மண்டபத்தின் பிரமாண்டமான அறையில் இந்த சிறப்பு இரவு விருந்து நடைபெறவுள்ளது. திரெளபதி முர்மு அளிக்கும் இரவு விருந்தில் முன்னாள் பிரதமர், குடியரசுத் தலைவர் உள்பட 170 முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
நாட்டின் பாரம்பரியத்தை பறை சாற்றும் வகையிலான சைவ, அசைவ உணவுகள் விருந்தில் இடம்பெற்றுள்ளன. விருந்தின்போது 50 - 60 இசைகலைஞர்கள் பங்கேற்கும் இசைக்கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அளிக்கும் இரவு விருந்துக்கு ஜி-20 அமைப்பு நாடுகளின் தலைவர்கள் உள்பட ஏராளமான தலைவர்கள் வருகைத்தரத் தொடங்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.