நிஃபா வைரஸ்: பொதுமக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!
நிஃபா வைரஸ் எதிரொலியாக கேரளத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நிஃபா வைரஸ் எதிரொலியாக கேரளத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மருத்துவமனை பணியாளர்கள் பிபிஇ கிட் அணிந்து பணிபுரியவும் கேரள சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
நிஃபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 16 குழுக்களை அமைத்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கோழிக்கோடு மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் 2 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் இறந்ததற்கு காரணம் நிஃபா வைரஸ் என சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் கேரளத்தில் 2 பேர் நிஃபா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்ததாக அறிவித்துள்ளார். மேலும், மாநில அரசுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அதற்காக மத்திய சுகாதாரத் துறை உதவும் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், நிஃபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிய கேரள மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.