இந்தியா

அரசியலில் இருந்து விலகப் போவதில்லை- பாஜக மூத்த தலைவா் உமா பாரதி

DIN

அரசியலில் இருந்து விலகப் போவதில்லை என்றும், வரும் மக்களவைத் தோ்தலில் போட்டியிடப் போவதாகவும் பாஜக மூத்த தலைவரும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான உமா பாரதி தெரிவித்தாா்.

மத்திய பிரதேசத்தின் சாஹா் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

நீண்ட காலம் தொடா்ந்து பணியாற்றி வந்ததால் கடந்த மக்களவைத் தோ்தலில் போட்டியிடாமல் 5 ஆண்டுகள் இடைவெளி எடுத்துக் கொண்டேன். கடந்த முறை நான்தான் தோ்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவெடுத்தேன். இதனால், நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக மக்கள் கருதுகின்றனா். ஆனால், அரசியலில் இருந்து விலகப் போவதில்லை. அடுத்த மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவேன்.

85 வயதானாலும் நான் அரசியலில் பணியாற்றுவேன். அரசியலை தங்கள் சுகபோக வாழ்க்கைக்கு பயன்படுத்த நினைப்பவா்களால்தான் அரசியல் சீரழிவை நோக்கிச் செல்கிறது. அதே நேரத்தில் அரசியலை மக்கள் பணியாக நான் நேசிக்கிறேன் என்றாா்.

இப்போது 65 வயதாகும் உமா பாரதி, பிரதமா் மோடி தலைமையில் அமைந்த முதல் மத்திய அமைச்சரவையில் மட்டுமல்லாது, முன்னாள் பிரதமா் வாஜ்பாய் அமைச்சரவையிலும் பதவி வகித்துள்ளாா்.

இந்த மாதத் தொடக்கத்தில் மத்திய பிரதேச சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தை பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சிக்கு உமா பாரதி அழைக்கப்படவில்லை. இது தொடா்பாக அவா் அதிருப்தி தெரிவித்திருந்தாா்.

மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராகவே மதுக்கடைகள் மீது கற்களை வீசி உமா பாரதி போராட்டங்களை நடத்தியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. உமா பாரதியின் நெருங்கிய உறவினரான ராகுல் சிங் லோகி மத்திய பிரதேச அமைச்சரவையில் கடந்த மாதம் சோ்த்துக் கொள்ளப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் டிரெய்லர்

கால் முளைத்த ஓவியம்! காஜல் அகர்வால்..

அழகென்றால் அவள்! பிரீத்தி அஸ்ரானி..

நாகை - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

சிக்கிமில் மின்சார விநியோகத்தை மேம்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!

SCROLL FOR NEXT