இந்தியா

மும்பை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்க தூசு பறிமுதல்!

சிங்கப்பூரில் இருந்து வந்த இந்திய குடும்பத்திடமிருந்து மும்பை விமான நிலையத்தில் ரூ.1 கோடிக்கு மேல் மதிப்புள்ள 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

DIN

மும்பை: சிங்கப்பூரில் இருந்து வந்த இந்திய குடும்பத்திடமிருந்து மும்பை விமான நிலையத்தில் ரூ.1 கோடிக்கு மேல் மதிப்புள்ள 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.1,05,27,331 மதிப்புள்ள தங்கத் தூசை தம்பதியினர் மற்றும் அவர்களின் 3 வயது குழந்தையின் உள்ளாடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக மும்பை சுங்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தகவலின் அடிப்படையில், மும்பை விமான நிலைய சுங்க அதிகாரிகள் செப்டம்பர் 12ம் தேதி அன்று சிங்கப்பூரில் இருந்து வந்த ஒரு இந்திய குடும்பத்திடமிருந்து 2 கிலோ எடையுள்ள 24 தங்க தூசை பறிமுதல் செய்தனர். தங்கத்தை இரண்டு பயணிகளும் தங்கள் உள் ஆடைகள் மற்றும் அவர்களின் மூன்று வயது குழந்தையின் டயப்பரில் மறைத்து வைத்திருந்தனர்.

முன்னதாக, கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில், மலக்குடலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 700 கிராம் தங்க பேஸ்ட்டுடன் ஒருவரை விமான சுங்க புலனாய்வுப் பிரிவு கைது செய்தது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.40 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... ஒரு ஹீரோ, 23 ஆம் புலிகேசியான கதை!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

SCROLL FOR NEXT