இந்தியா

ஆதார் விவரங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு!

DIN

ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை யுஐடிஏஐ(UIDAI) வரும் டிச.14 வரை நீட்டித்துள்ளது. 

பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இணையதளத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம் என்று யுஐடிஏஐ தெரிவித்தது.

இதன்மூலம் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் அட்டையில் தேவையான தகவல்களை மாற்றிக்கொள்ளலாம். 

முன்னதாக, இலவச புதுப்பிப்பு காலக்கெடு ஜூன் 14 என நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், இந்த காலக்கெடுவை செப்டம்பர் 14 வரை அரசு நீட்டித்தது. இப்போது, இரண்டாவது முறையாக, இலவச ஆதார் அட்டை புதுப்பிப்பு காலக்கெடுவை அரசாங்கம் மேலும் நீட்டித்துள்ளது. 

பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களை டிசம்பர் 14 வரை இணையதளத்தில்  இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, ஆதார் அட்டையில் உள்ள ஒவ்வொரு விவரத்தையும் புதுப்பிப்பதற்கு ரூ. 50 செலவாகும். அரசு தெரிவித்துள்ள கட்டணமில்லா இணைய சேவைகளுக்கு மட்டுமே இலவச வசதி பொருந்தும். மற்ற சேவைகளை ஆதார் மையங்களில் கட்டணம் செலுத்தி மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஆதார் அடையாள அட்டையை  'குடும்பத் தலைவர்' என்கிற முறையை பயன்படுத்தியும் முகவரியை மாற்றலாம் என்று யுஐடிஏஐ என முன்னதாக தெரிவித்தது.

இதன்மூலம் குடும்ப உறுப்பினர்களை ஒருங்கிணைத்து முகவரி உள்ளிட்ட வசதிகளை மாற்ற புதிய வசதியை மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை: 300க்கும் மேற்பட்டோர் பலி!

எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கிய பொன்முடி!

கேரள கோயில்களில் அரளிப்பூ பயன்பாட்டுக்குத் தடை!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

எங்களது திட்டங்களை தடுத்து நிறுத்திய ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன்: சிஎஸ்கே பயிற்சியாளர்

SCROLL FOR NEXT