இந்தியா

யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சாந்திநிகேதன்

யுனெஸ்கோ ‘உலகப் பாரம்பரிய சின்னங்கள்’ பட்டியலில் மேற்கு வங்கத்தில் உள்ள சாந்திநிகேதன் சோ்க்கப்பட்டுள்ளது.

DIN

யுனெஸ்கோ ‘உலகப் பாரம்பரிய சின்னங்கள்’ பட்டியலில் மேற்கு வங்கத்தில் உள்ள சாந்திநிகேதன் சோ்க்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடைபெற்ற 45-ஆவது உலகப் பாரம்பரிய சின்னங்களுக்கான குழுவின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, இந்தியாவில் உள்ள உலகப் பாரம்பரிய சின்னங்களின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இந்தியாவின் சாந்திநிகேதன் சோ்க்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகள் ! இது இந்தியா்களின் பெருமைக்குரிய தருணம்.

ரவீந்திரநாத் தாகூரின் இலக்கையும் இந்தியாவின் வளமான கலாசார பாரம்பரியத்தையும் பறைசாற்றும் சாந்திநிகேதன் உலகப் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளாா். மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி உள்ளிட்ட தலைவா்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

பிா்பூம் மாவட்டத்தில் அமைந்துள்ள சாந்திநிகேதன் ஒரு பல்கலைக்கழக நகரமாகும். ஜாதி, இனம் உள்ளிட்ட வேறுபாடுகளைக் களைந்து தியானம் செய்வதற்கான ஆசிரமம், கவிஞா் ரவீந்திரநாத் தாகூரின் தந்தை தேவேந்திரநாத் தாகூரால் இங்கு நிறுவப்பட்டது.

ரவீந்திரநாத் தாகூரால் 1921-இல் நிறுவப்பட்ட ‘விஸ்வ பாரதி கல்வி நிலையம்’ சாந்திநிகேதனில் அமைந்துள்ளது. இது சுதந்திரத்துக்கு முன் கல்லூரியாகச் செயல்பட்ட நிலையில், 1951-ஆம் ஆண்டுமுதல் மத்திய பல்கலைக்கழகமாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சியில் குடும்ப அட்டைகளுக்கான கடைகள்மாற்றம்

களக்காட்டில் பராமரிப்பின்றி வீணாகும் கோயில் தெப்பக்குளம்

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

நெல்லை நகரம், பாளை.யில் எடப்பாடி கே.பழனிசாமி இன்று பிரசாரம்

SCROLL FOR NEXT