இந்தியா

பாஜக அணியில் மதசார்பற்ற ஜனதா தளம்!

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் மதசார்பற்ற ஜனதா தளம் அதிகாரபூர்வமாக இணைந்தது. 

DIN

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் மதசார்பற்ற ஜனதா தளம் அதிகாரபூர்வமாக இணைந்தது. 

2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ், மஜத ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 28 தொகுதிகளில் 25 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. மண்டியா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்ற நடிகை சுமலதா, பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தாா். காங்கிரஸ், மஜத தலா ஒரு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றிருந்தன.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தோ்தலில் மஜதவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளது. இத் தகவலை கா்நாடக முன்னாள் முதல்வா் எடியூரப்பா அண்மையில் உறுதி செய்திருந்தார். மக்களவைத் தோ்தலில் 5 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்குமாறு மஜத வலியுறுத்தியதாகவும், ஆனால், 4 தொகுதிகளைக் கொடுக்க பாஜக ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கூட்டணியை அறிவிப்பதில் சற்று இழுபறி நீடித்தது. இந்த நிலையில் கூட்டணி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரை தில்லியில் இன்று மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் மதசார்பற்ற ஜனதா தளம் அதிகாரபூர்வமாக இணைந்தது. 

இதுகுறித்து ஜெ.பி.நட்டா தனது ட்விட்டர் பதிவில், தேசிய ஜனநாயக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் அங்கம் வகிக்க முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களை தேசிய ஜனநாயக கூட்டணியில் முழு மனதுடன் வரவேற்கிறோம். இது தேசிய ஜனநாயக கூட்டணியை மேலும் வலுப்படுத்துவதோடு புதிய இந்தியா, வலிமையான இந்தியா' என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையையும் வலுப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் சுயஉதவிக்குழு, விவசாயக் கடன் வழங்கும் விழா

சேலம் வழியாக ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில்

தெடாவூா் கால்நடை சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வா்த்தகம்

கொட்டகைக்கு தீ வைப்பு: 15 நாட்டுக் கோழிகள், 2 ஆடுகள் உயிரிழப்பு!

4 சுங்கச்சாவடிகள் நிலுவைத் தொகையை செலுத்த முடிவு! உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

SCROLL FOR NEXT