இந்தியா

நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராகுல் 

DIN

நாடு தழுவிய வகையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

தில்லியில் செய்தியாளர்களை சந்திப்பில் ராகுல் அளித்த பேட்டியில், 

நாடு தழுவிய வகையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். 90 செயலாளர்களில் 3 பேர் மட்டுமே ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். 5 சதவீத மக்களே எஞ்சிய 95 சதவீத மக்களுக்கு சட்டத்தை உருவாக்குகிறார்கள்.

படிக்க: தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்சநீதிமன்றம்மகளிர் மசோதாவில் ஓபிசி இடஒதுக்கீடு கட்டாயம் வழங்க வேண்டும். மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த 10 ஆண்டுகள் ஆகலாம், ஒருவேளை நடைமுறைக்கு வராமலும் போகலாம். மகளிர் இட ஒதுக்கீட்டை இன்றே நடைமுறைப்படுத்த முடியும் ஆனால் அரசு அதை விரும்பவில்லை. 

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் இருந்த கவனத்தை பாஜக அரசு திசைதிருப்புகிறது. நாட்டின் ஒட்டுமொத்த பட்ஜெட் மதிப்பில் 5 சதவீத நிதிதான் ஓபிசி அதிகாரிகளிடம் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாம்

பிளஸ் 1 தோ்வில் 91.17% தோ்ச்சி கோவை மாவட்டம் முதலிடம்

300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திருப்பூரில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் மின்தடை

திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

SCROLL FOR NEXT