பைக்கில் சென்ற ஹரியாணா முதல்வர் 
இந்தியா

கார் இயங்காத நாள்: பைக்கில் சென்ற ஹரியாணா முதல்வர்!

ஹரியாணாவின் கர்னல் மாவட்டத்தில் கார் இயங்காத நாள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கத்தார் பைக்கில் பயணம் மேற்கொண்டார்.

DIN

ஹரியாணாவின் கர்னல் மாவட்டத்தில் கார் இயங்காத நாள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கத்தார் பைக்கில் பயணம் மேற்கொண்டார்.

ஹரியாணா மாநிலத்தின் நிர்வாக தலைநகரமாக கர்னல் உள்ளது. இந்த மாவட்டத்தில் அவ்வப்போது காற்று மாசு ஏற்படுவதால், அதனை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகின்றது.

இந்த நிலையில், வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை ‘கார் இயங்காத நாள்’ கடைபிடிக்க வேண்டும் என்று முதல்வர் மனோகர் கத்தார் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, செவ்வாய்க்கிழமைகளில் சாலைகளில் கார் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்துக்கு வரும் அரசு ஊழியர்கள் சைக்கிள்களில் வர உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்று காலை  வீட்டிலிருந்து கர்னல் விமான நிலையம் வரை முதல்வர் மனோகர் பைக் ஓட்டிச் சென்றார்.

விமான நிலையத்துக்கு முதல்வர் மனோகர் கத்தார் பைக்கில் செல்லும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT