கோப்புப்படம் 
இந்தியா

ஒரே நாடு, ஒரே தேர்தல்: மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை?

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கான அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை என 22-வது சட்ட ஆணையம் பரிந்துரைக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

DIN

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கான அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை என 22-வது சட்ட ஆணையம் பரிந்துரைக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நாட்டில் மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது குறித்த சாத்தியக்கூறை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. 

இந்நிலையில் இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணியில் மத்திய சட்ட ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து 22-வது சட்ட ஆணையம் அறிக்கை அளிக்கும். அதனடிப்படையில் உயர்நிலைக் குழு விவாதித்து முடிவெடுக்கும் என்று தெரிகிறது. 

இந்நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு அரசியலமைப்பு விதிகள் மற்றும் பிற சட்டங்களின் சில விதிகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. 

ஆனால், இந்த அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று சட்ட ஆணையம் பரிந்துரைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்கள், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை எதிர்த்து வரும் நிலையில், இதற்கான அரசியலமைப்பு திருத்தங்களுக்கு மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை என்று ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

ஆனால், முந்தைய சட்ட ஆணையம், இதற்கு 50% மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கூறியது. 

அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு மாநிலங்கள் ஒப்புதல் தேவையா என்பதும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவுக்கு முன் உள்ள சிக்கல்களில் முக்கியமானது. 

முன்னதாக, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய மத்திய அரசு காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை என்று கூறிய சட்ட ஆணையம், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை 2024 ஆம் ஆண்டில் வாய்ப்பில்லை, 2029 ஆம் ஆண்டு கொண்டு வரப்படலாம் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

SCROLL FOR NEXT