கோப்புப்படம் 
இந்தியா

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடங்கியது!

தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

DIN

தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது. 

கடந்த செப். 18 ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில்கூட  தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 5,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. 

ஆனால் தங்களிடம் போதிய நீர் இருப்பு இல்லை என்று கூறி கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றமும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை செயல்படுத்தக் கூறியது. 

கடந்த செப். 26 ஆம் தேதி நடைபெற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்திலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று பிற்பகல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுத் தரப்பில் வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது. 

காவிரி நீரை திறந்துவிடக்கூடாது என்று கர்நாடக விவசாய அமைப்புகளும் அதுபோல காவிரி நீர் வேண்டும் என்று தமிழக விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT