முகப்பு
இந்தியா

குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆஸி. பிரதமருக்கு வரவேற்பு

குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனேசிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனேசிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி 4 நாள்கள் சுற்றுப்பயணமாக புதன்கிழமை இந்தியா வந்தார்.

இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர், இந்தியாவில் அளித்த அன்பான வரவேற்புக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்ததோடு, இரு நாடுகளும் கூட்டாளர்கள் என்றும், அந்த கூட்டாண்மையை ஒவ்வொரு நாளும் வலுவாக உருவாக்குவதாகவும் கூறினார். 

இரு நாடுகளின் கிரிக்கெட் அணிகள் உலகின் சிறந்த அணிகளாக  போட்டியிடுவதால், சிறந்த உலகை உருவாக்க இரு நாடுகளும் ஒத்துழைப்பதாக அல்பானீஸ் மேலும் கூறினார்.

ஆஸ்திரேலிய பிரதமராக ஆல்பனேசி கடந்த ஆண்டு மே மாதம் பதவியேற்றதையடுத்து, முதல் முறையாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →