முகப்பு
இந்தியா

காங்கிரஸ் முன்னிலை: கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
பகிர்:

தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கர்நாடக பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மாநிலத்தில் 36 மையங்களில் இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

காலை 10 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 119, பாஜக-74, மஜத -26, பிற கட்சிகள்- 5 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன. 

பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களுக்கு மேலாகவே காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அதுபோல பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகங்களிலும் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →