ராகுல் காந்தி 
இந்தியா

வயநாட்டில் ராகுல் காந்தி நாளை வேட்புமனு!

2019 மக்களவைத் தேர்தலில் வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் காந்தி, 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

DIN

வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.

2019 மக்களவைத் தொகுதியில் வயநாட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இந்த முறை மீண்டும் வயநாட்டில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை கேரளம் வரும் ராகுல் காந்தி பகல் 12 மணியளவில் சாலையில் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.

அதன்பிறகு, கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியவுடன் நாளையே தில்லி திரும்புகிறார்.

வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து பாஜக மாநில தலைவர் சுரேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ராஜாவின் மனைவியும், கட்சியின் மூத்த தலைவருமான ஆனி ராஜா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

ராகுலின் வருகையை விமர்சித்துள்ள சுரேந்திரன், “கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்காக ராகுல் காந்தி எதுவும் செய்யவில்லை. இறுதியாக வேட்புமனு தாக்கல் செய்ய வருவதில் மகிழ்ச்சி.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT