டி.ராஜா  
இந்தியா

ராகுல் - ஆனி ராஜா போட்டி: மக்கள் கேள்விகளை காங்கிரஸ் கவனத்தில் கொள்ள வேண்டும்!

வயநாட்டிற்கு பதிலாக தென்மாநிலங்களில் வேறு ஏதேனும் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டிருக்கலாம்

DIN

வயநாட்டிற்கு பதிலாக தென்மாநிலங்களில் வேறு ஏதேனும் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டிருக்கலாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் டி.ராஜாவின் மனைவியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான ஆனி ராஜா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதேபோன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியும் அதே தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

இரு கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால், ஒரே கூட்டணியிலிருந்து இரு வேட்பாளர்கள் ஒரே தொகுதியில் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தில்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா, பொதுமக்கள் மத்தியில் தற்போது பொதுவான கேள்வி ஒன்று நிலவுகிறது. வயநாடு தொகுதியில் ஆனி ராஜாவுக்கு எதிரான ராகுல் காந்தி ஏன் போட்டியிட வேண்டும் என்பதுதான் அந்தக் கேள்வி. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி என்ன சொல்ல விரும்புகிறது? மிகக் குறுகிய காலத்தில் வயநாடு தொகுதி குறித்த முடிவை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது. ராகுல் காந்தியை தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகத்தின் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருக்கலாம். மக்கள் இது குறித்து ஏன் கேள்வி எழுப்புகிறார்கள் என்பதை காங்கிரஸ் கட்சி புரிந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT