இந்தியா

விஷப் பாம்பையும் நம்பலாம் ஆனால்..! மம்தா

மாதிரி நடத்தை விதிகளை பாஜக பின்பற்றவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

DIN

மக்களவைத் தேர்தலுக்கான மாதிரி நடத்தை விதிகளை பாஜக பின்பற்றவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கூச் பெஹாரில் மம்தா பானர்ஜி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

பேரணியில் பேசிய அவர், மத்திய புலனாய்வு அமைப்புகளான எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஆகியவை பாஜகவின் உத்தரவின்பேரில் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

விஷப் பாம்பை நம்பலாம் அதனுடன் அன்பாகவும் இருக்கலாம், ஆனால் பாஜகவை ஒருபோதும் நம்ப முடியாது. பாஜக நாட்டை சீரழித்து வருகிறது. மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கெல்லாம் தனது கட்சி அடிபணியாது.

மத்திய புலனாய்வு அமைப்புகளான என்ஐஏ, வருமான வரித்துறை, பிஎஸ்எஃப் மற்றும் சிஐஎஸ்எஃப் ஆகியவை பாஜகவுக்காக செயல்படுகின்றன.

பாஜகவுக்காக மத்திய முகமைகள் செயல்படுவதால், சமநிலையை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்திடம் பணிவுடன் மன்றாடுவோம். பாஜக ஒரே நாடு, ஒரே கட்சி என்ற கொள்கையை மட்டுமே பின்பற்றுகிறது. மாநிலத்தில் சிஏஏ சட்டப்பூர்வ குடிமக்களை வெளிநாட்டினராக மாற்றுவதற்கான ஒரு பொறியாகும் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐடி பங்குகள் உயர்வு! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்...

ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியில் பணம், நகை கொள்ளை!

கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழா! குளித்தலை சிவராமன் இல்லம் சென்று உதயநிதி ஆறுதல்!!

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

SCROLL FOR NEXT