புவனேஸ்வர்: ஒடிசாவின் நாயகர் மாவட்டத்தில், விலங்குகளின் பாகங்களுடன் கைது செய்யப்பட்ட சுமாா் 35 வயது மதிக்கதக்க நபரை நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது இன்று தீர்ப்பளித்தது.
இரண்டு சிறுத்தை தோல்கள், ஒரு மான் தோல், 115 பாங்கோலின் செதில்கள் மற்றும் 2 காட்டுப்பன்றியின் தந்தங்களுடன் 2022 நவம்பரில் மாநில காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையால் கைது செய்யப்பட்டார் பகபத் மாஜி.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்த தசபல்லா நீதிமன்றம் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததும், ரூ.10,000 அபராதமும் விதித்தது.
அபராதம் செலுத்த தவறினால் அவர் மேலும் 6 மாதம் சிறையில் இருக்க வேண்டும் என்று நிதிமன்றம் தீர்ப்பளித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.