இந்தியா

தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டலாமா?

DIN

கட்சிகளுக்கு ஏற்றவாறு தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டலாமா? என தில்லி அமைச்சர் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவில் இணையாவிட்டால் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்படுவீர்கள் என மிரட்டல்கள் வருவதாக தில்லி அமைச்சர் அதிஷி புகார் எழுப்பியிருந்தார். இதற்கு பாஜகவிருந்து பலர் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். மேலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைப்பதாக அதிஷி மீது தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையமும் அதிஷிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக பேசிய அதிஷி, எதிர்க்கட்சிகளை குறிவைத்து நோட்டீஸ் அனுப்புவதுதான் ஆணையத்தின் கொள்கையா? எனக் கேள்வி எழுப்பினார்.

பாஜக புகார் தந்தால் தேர்தல் ஆணையம் உடனடியாக எதிர்க்கட்சியினருக்கு நோட்டீஸ் அனுப்புவதாக விமர்சித்த அவர், பாஜகவுக்கு எதிராக புகார் கொடுத்து 3 நாள்களாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ஆவது சுற்றில் மகளிர் இரட்டையர்கள்

ஈரான் அதிபா் இறுதிச் சடங்கு: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு?

பாலியல் வன்கொடுமை : இளைஞா் கைது

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளைக் கைவிட்ட காங்கிரஸ்: நிா்மலா சீதாராமன்

SCROLL FOR NEXT