புது தில்லி: திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த காதலியை கொலை செய்து உடலை வீட்டில் அலமாரியில் மறைத்துவிட்டுத் தப்பிச் சென்ற காதலன் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தையல்காரர் விபுல் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தில்லி அழைத்து வரப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் ஏப்ரல் 4ஆம் தேதி, கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை, தனது 26 வயது மகளை கடந்த சில நாள்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்த போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தந்தையின் புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்துபார்த்தபோது, வீட்டுக்குள், அப்பெண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். வீட்டின் அலமாரிக்குள், அப்பெண்ணின் சடலத்தை மறைத்துவைத்துவிட்டு, விபுல் தப்பியோடியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
உடனடியாக, அவரைத் தேடிய காவல்துறையினர், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அவரை கைது செய்து தில்லி அழைத்து வந்தனர்.
ஏற்கனவே, தில்லியில், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை அவரது காதலர் கொலை செய்து, உடல் பாகங்களை வெட்டி காட்டுக்குள் வீசிய சம்பவம் தில்லியை உலுக்கியிருந்த நிலையில், இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.