சென்னை தியாகராய நகரில் பட்டு வேட்டி, சட்டை அணிந்து வாகனப் பேரணையில் பங்கேற்ற பிரதமர் மோடி. R Senthilkumar
இந்தியா

அயோத்தியா, வந்தே பாரத்.. பாஜகவின் புதிய தேர்தல் பாடல் வெளியீடு

அயோத்தியா, வந்தே பாரத்.. பாஜகவின் புதிய தேர்தல் பாடல் வெளியீடு

DIN

மக்களவைத் தேர்தல் நெருங்கவிருக்கும் நேரத்தில், பாஜக தனது புதிய தேர்தல் பாடலை இன்று வெளியிட்டுள்ளது. அதில், அயோத்தி ராமர் கோயில், வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவை மோடியின் குடும்பம் என அழைக்கும் வகையில் அமைந்திருக்கும் பாஜகவின் தேர்தல் விளம்பர பாடலில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களைக் கூறி, இதனால்தான் ஒட்டுமொத்த இந்தியாவும் மோடியின் குடும்பம், என்று குறிப்பிடும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன. அதில், மேலும், பாஜகவின் கொள்கைகளால், ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபடுவோர் நடுங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பாடல், சுமார் 12 இந்திய மொழிகளில் பாடப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்தி பாஜக ஒரு தேர்தல் பாடலை வெளியிட்டிருந்தது.

அதற்கும் முன்பு, டிசம்பர் மாதம், மோடி மீண்டும் வருவார் என்பது போன்ற ஒரு பாடலையும் பாஜக வெளியிட்டு பெரும் விளம்பரத்தையும் செய்திருந்தது. அந்த 10 நிமிட விடியோ, பிரதமர் நரேந்திர மோடி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வது, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் செங்கோல் நிலைநாட்டுவது, அவர் பங்கேற்ற பொதுக்கூட்டங்களின் விடியோக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“காவலர் வணக்கம் சொல்லவில்லை!” Tamilisai Soundararajan விமர்சனம் | BJP | DMK

மீண்டும் 80 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: கலக்கத்தில் மக்கள்!

சிலப்பதிகார ஆய்வுகள்

பிகார் தேர்தல்: மகாகத்பந்தன் கூட்டணியில் சிக்கலாகும் தொகுதிப் பங்கீடு!

சக்சஸ் உங்கள் சாய்ஸ்!

SCROLL FOR NEXT