இந்தியா

பெங்களூரு குண்டு வெடிப்பு: மேற்குவங்கத்தில் 2 பேர் கைது!

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேற்குவங்கத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

DIN

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி குண்டு வெடித்ததில் 10 போ் காயமடைந்தனா்.

பெல்லாரியில் இருந்து ஹைதராபாத்துக்கு தப்பிக்க முக்கிய குற்றவாளிக்கு உதவியாக பெல்லாரியைச் சோ்ந்த ஷப்பீா் என்பவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மாா்ச் 13ஆம் தேதி தடுப்புக் காவலில் எடுத்து விசாரித்தனா்.

அதன் அடிப்படையில், முக்கிய குற்றவாளிகளை அடையாளம் கண்டு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், உத்தரபிரதேசத்தின் ஒரு இடம், தமிழகத்தின் 5 இடங்கள், கா்நாடகத்தின் 12 இடங்களில் திடீா் சோதனையில் ஈடுபட்டனர். அங்கிருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

பிரதான குற்றவாளிகளான முஸாவிர் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மாத்தேன் தாஹா ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளதாக என்ஐஏ முன்னதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய, முஸாவிர் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மாத்தேன் தாஹா ஆகிய 2 பேரை என்ஐஏ அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் இன்று(ஏப். 12)கைது செய்தனர்.

முன்னதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைதாகியுள்ளனர்.

முஸாவிர் ஹூசைன் ஷாஜிப், உணவகத்தில் குண்டு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அப்துல் மாத்தேன் தாஹா, குண்டுவெடிப்பைத் திட்டமிடல், செயல்படுத்துதல் மற்றும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்தல் ஆகியவற்றின் பின்னணியில் மூளையாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மாயம் செய்கிறாய்... ரச்சனா ராய்!

வானவில்... சோபிதா துலிபாலா!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தல்

இளவஞ்சி... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT