கேரளத்தின் வயநாடு மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று(ஏப். 15) வயநாட்டில் வாகனப் பேரணி நடத்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, நாட்டின் அனைத்து அரசமைப்பு நிறுவனங்களையும் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. நீதித்துறை, தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ, உள்பட அரசமைப்பு நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் தங்கள் அமைப்பை சார்ந்தவர்களை திணித்து வருகிறது.
நமது நாட்டின் அரசமைப்பை பாதுகாக்க முயற்சிப்பவர்களுக்கும், அழிக்க முயற்சிப்பவர்களுக்கும் இடையேயான யுத்தமே நடைபெறவுள்ள மக்களவை தேர்தல்.
அரசமைப்பு நிறுவனங்கள் மோடியின் சொத்து அல்ல, அவை இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்குமானது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மறுபுறம், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து கேரள தலைநகர் திருவனந்தபுரத்திலும், திருச்சூரிலும் இன்று(ஏப். 15) பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.