இந்தியா

விமானங்களில் 12 வயது வரையுள்ள சிறாா்களுக்கு பெற்றோருடன் இருக்கை: டிஜிசிஏ அறிவுறுத்தல்

Din

விமானங்களில் 12 வயது வரையுள்ள சிறாா்களுக்கு அவா்களின் பெற்றோா் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவுறுத்தியுள்ளது.

விமானங்களில் பயணிக்கும் 12 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கு அவா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலா்களுடன் இருக்கை ஒதுக்கப்படுவதில்லை என்று புகாா் எழுந்தது.

இந்நிலையில், டிஜிசிஏ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலா் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் விமான போக்குவரத்து வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக உள்ள இந்தியாவில், உள்நாட்டு விமான போக்குவரத்தும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருடன் டிரைலர்!

ஒடிஸாவில் தாமரை மலரும்! -அமித் ஷா நம்பிக்கை

ராகுல் காந்தியை புகழும் செல்லூர் ராஜு: விடியோ வைரல்!

பாஜக எம்எல்ஏவின் பேரன் தற்கொலை!

பிறந்தநாள் வாழ்த்துகள் மோகன்லால்!

SCROLL FOR NEXT