-
-
இந்தியா

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

DIN

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி இதுவரை 33.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தமிழகம் (39), புதுச்சேரி (1) உள்பட 21 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களில் அடங்கிய 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

இரண்டாம் கட்டமாக கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் நிலையில், மாநிலம் முழுவதும் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.ஆண்டனி, எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், சசி தரூர், சுரேஷ் கோபி, பி.கே.குன்ஹாலிக்குட்டி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் மக்களவை வேட்பாளர்கள் வாக்களித்தனர்.

இந்த நிலையில் மாநிலத்தில் 12.30 மணி நிலவரப்படி இதுவரை 33.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT