மம்தா பானர்ஜி கோப்புப் படம்
இந்தியா

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

DIN

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அசன்சால் மக்களவைத் தொகுதி வேட்பாளர் சத்ருகன் சின்ஹாவை ஆதரித்து இன்று பிரசாரம் மேற்கொண்ட அவர், மேற்கு வங்கத்தில் பட்டாசு வெடித்தால்கூட, சிபிஐ உள்ளிட்ட மத்திய அமைப்புகள் விசாரணைக்கு வருகின்றன. போர் நடப்பதாகத் தெரிகிறது. மாநில போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. என்ன கிடைத்தது என்று தெரியவில்லை. எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

கைப்பற்றப்பட்ட பொருட்களை அவர்கள் (சிபிஐ) ஒரு காரில் கொண்டு வந்திருக்கலாம் என்று அவர் சந்தேகம் தெரிவித்தார். முன்னதாக சந்தேஷ்காளியில் ஷாஜஹான் ஷேக் கூட்டாளியின் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் போலீஸ் சர்வீஸ் ரிவால்வர் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சிபிஐ வெள்ளிக்கிழமை கைப்பற்றியது என்று அதிகாரிகள் தெரிவித்த நிலையில் மம்தா இவ்வாறு கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பா்கானா மாவட்டம், சந்தேஷ்காளி பகுதியில், திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா் ஷாஜஹான் ஷேக் (தற்போது கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்) மற்றும் அவரின் கூட்டாளிகள், பொதுமக்களின் நிலங்களை அபகரித்து, பெண்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பகுதி பெண்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து, தலைமறைவாக இருந்த ஷாஜஹான் ஷேக் உள்பட பலா் கைது செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT