ஹிமாசலப் பிரதேசம் ANI
இந்தியா

ஹிமாசல் கனமழை: 77 பேர் உயிரிழப்பு, 190-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடல்!

ஹிமாசலப் பிரதேசத்தில் கனமழை காரணமாக இதுவரை 77 பேர் உயிரிழந்ததாகவும், 190-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIN

ஹிமாசலப் பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக 77 பேர் இதுவரை உயிரிழந்ததாகவும், 190-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டு ஆகஸ்ட் 7 வரை மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிமாசலில் மேகவெடிப்பின் காரணமாக ஏற்பட்ட தொடர் கனமழையால் கடந்த 4 நாள்களாக மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் தொடர்ந்து வாகனப் போக்குவரத்து நடைபெறும் சாலைகளில் மந்தி பகுதியில் 79 சாலைகளும், குலு பகுதியில் 38 சாலைகளும், சம்பாவில் 35 சாலைகளும், சிம்லாவில் 30 சாலைகளும், காங்க்ராவில் 5 மற்றும் கின்னார், லாஹால், ஸ்பிதி பகுதிகளில் தலா 2 சாலைகள் சேர்த்து மொத்தம் 191 சாலைகள் மூடப்பட்டதாக மாநில அவசர நடவடிக்கை மையம் இன்று தெரிவித்துள்ளது.

குலு மணாலி பகுதியில் மழையால் அடித்துச் செல்லப்பட்ட நெடுஞ்சாலை.

மாநிலம் முழுக்க 294 மின்சார டிரான்ஸ்ஃபார்மர்களும், 120 நீர் வழங்கும் மையங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹிமாசல் சாலைப் போக்குவரத்துக் கழகம் கொடுத்தத் தகவலின் படி மொத்தமுள்ள 3,612 வழித்தடங்களில் 82 வழித்தடங்களில் பஸ் வசதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மிதமான மற்றும் கனமழை தொடர்ந்து மாநிலத்தின் சில பகுதிகளில் பெய்து வரும் நிலையில் நேற்றைய (ஆகஸ்ட் 2) தரவுகளின்படி, ஜோஹிந்தர் நகரில் அதிகபட்சமாக 85 மி.மீ மழை பெய்துள்ளது.

கடந்த ஜூன் 27-ம் தேதி பருவமழை தொடங்கியதிலிருந்து ஆகஸ்ட் 1 வரை மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 77 பேர் உயிரிந்ததாகவும், மாநிலத்திற்கு ரூ. 655 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேட்டையில் பள்ளி ஆட்டோ கவிழ்ந்தது: 10 மாணவா்கள் காயம்

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவா்களுக்கு குரூப் 1 முதன்மைத் தோ்வு பயிற்சி

சேலம் மாநகரப் பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்க ஆணையா் உத்தரவு!

தோ்தல் வரை பசி, தூக்கத்தை மறந்துவிடுங்கள்: திமுகவினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

பச்சகுப்பம் பாலாறு மேம்பாலம் திறப்பு விழா ஏற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT