வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலையில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்கின்றன 
இந்தியா

வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கு ரூ.4 கோடி ஒதுக்கியது கேரள அரசு

வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ.4 கோடி ஒதுக்கியிருக்கிறது கேரள அரசு

DIN

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவடட்த்தில் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, உடனடியாக ரூ.4 கோடி ஒதுக்கப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

விரைவாக, மாநில பேரிடர் மேலாண்மை நிதி, வயநாடு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்படும் என்றும், இந்த தொகை மக்களின் நிவாரணப் பணிகளுக்கு மட்டும் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று செய்தியாளர் சந்திப்பின்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த தகவலை வெளியிட்டார். மேலும், வயநாடுக்கு உதவுங்கள் என்ற சிறப்புப் பிரிவு ஒன்று உருவாக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை இந்த அமைப்பு ஒருங்கிணைக்கும் என்றும் கூறினார்.

இந்த உதவி மையத்தைத் தொடர்புகொண்டு, வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நினைக்கும் மக்கள் letushelpwayanad@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ, 9188940013, 9188940014, 9188940015 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT