உத்தரகண்டில் பெய்த அதிகன மழையால் 17 பேர் பலியாகியுள்ளனர்.
உத்தரகண்டில் கடந்த புதன்கிழமை, ஜூலை 31, மேக வெடிப்பு ஏற்பட்டதன் விளைவாக அதீத கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, ஜங்கிள்சட்டி பகுதியில் கேதார்நாத்திற்கு செல்லும் மலையேற்ற பாதையில் 20 முதல் 25 மீட்டர் நீளமுள்ள சாலை மந்தாகினி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனையடுத்து, கேதர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
கேதார்நாத் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மலையேற்ற பாதையில் சிக்கித் தவித்து வந்தநிலையில், இதுவரையில் 9,000 பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், 4 நாள்களாக பெய்து வரும் அதீத கனமழையால் 17 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். மேலும், மழை தொடர்பான சம்பவங்களில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்னும் மலையேற்றப் பாதையில் சிக்கியிருக்கும் 1000 பக்தர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பக்தர்களை மீட்கும் பணியில் உணவு, தண்ணீர் மற்றும் தங்குமிடம் வழங்கவும், அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான மீட்புப் பணிகளில் 882 நிவாரணப் பணியாளர்கள், 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.
வானிலை சாதகமாக மாறினால், மீதமுள்ள பக்தர்களும் ஞாயிற்றுக்கிழமைக்குள் மீட்கப்படலாம் என்று தெரிகிறது.
ஆகஸ்ட் 8ஆம் தேதி வரையில் உத்தரகண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.