பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் (கோப்புப் படம்) 
இந்தியா

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு: ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு!

இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைவதால் ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

DIN

இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் சட்டபிரிவு 370-ஐ ரத்து செய்து உத்தரவிட்டது.

அதுமட்டுமின்றி, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தையும் கொண்டுவந்த மத்திய அரசு, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என்ற யூனியன் பிரதேசங்களாக மாற்றியது.

இந்த சட்டப்பிரிவை நீக்கியதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தாலும், இந்த நாளின் நினைவாக பாஜக பல இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது. ஏனெனில், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்குவது பாஜகவின் நீண்டகாலத் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது.

எனவே, இந்த நாளில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்பதால் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைப்புகளுக்கு போலீஸாரால் அனுப்பப்பட்ட செய்தியில் பாதுகாப்பு கான்வாய்கள் நடமாட வேண்டாம் என்றும், மது விற்பனையை இன்று தடை செய்யுமாறும் கூறப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரை செல்லும் வழியில் உள்ள முகாம்களுக்குச் செல்லும் கான்வாய்களையும் இன்று நிறுத்திவைக்க அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், அமர்நாத் யாத்திரை பாதைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளில் உள்ள நிறுவனங்கள் வழக்கம்போல செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

600 கோல்களை நிறைவுசெய்த லூயிஸ் சௌரஸ்..! முதல் உருகுவே வீரராக சாதனை!

இருமல் மருந்து விவகாரம்: முதல்வருக்கு பொறுப்புள்ளது - அண்ணாமலை

சம்-சம் லட்கியே... நிகிதா சர்மா!

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: பல வணிக கட்டடங்கள் சேதம்

SCROLL FOR NEXT