முகப்பு
இந்தியா

வங்கதேச விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தில் ராகுல் பங்கேற்பு!

வங்கதேச நிலவரம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் விளக்கம்

Updated On : 6 ஆகஸ்ட் 2024, 10:34 am IST
அனைத்து கட்சி கூட்டம் - Jaishankar X
பகிர்:

வங்கதேசத்தில் நிலவும் வன்முறை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்துவிட்டு ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்தார்.

Advertisement

Advertisement

அவரை நேரில் சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வங்கதேச நிலவரம் குறித்து ஹசீனாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து அமைச்சர்கள் நேற்றிரவு ஆலோசனை செய்தனர்.

இந்த நிலையில், தில்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் வங்கதேச நிலவரம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இந்திய - வங்கதேச எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வங்கதேச அரசியல் சூழல், ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வந்தது உள்ளிட்டவை குறித்து விரிவான விளக்கத்தை ஜெய்சங்கர் அளித்தார்.

இந்தக் கூட்டத்தில் திமுகவின் டி.ஆர். பாலு, காங்கிரஸின் கே.சி.வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் அணி) சுப்ரியா சுலே உள்ளிட்ட பிற கட்சிகளின் எம்பிக்களும் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments