ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் வங்கதேச வீரர்கள் முன்னேற்றம்!
ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் வங்கதேச அணி வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் வங்கதேச அணி வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வங்கதேசம் 2 -0 என முழுமையாகக் கைப்பற்றியது. இதன் மூலம், ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டர்களுக்கான தரவரிசையில் வங்கதேச பேட்டர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷ்பிகர் ரஹீம் மற்றும் லிட்டன் தாஸ் பேட்டர்களுக்கான தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இரண்டு போட்டிகளில் முஷ்பிகர் ரஹீம் 259 ரன்களும், லிட்டன் தாஸ் 239 ரன்களும் எடுத்தனர்.
Advertisement
Advertisement
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்ததன் மூலம், பேட்டிங் தரவரிசையில் முஷ்பிகர் ரஹீம் 10 இடங்கள் முன்னேறி 16-வது இடமும், லிட்டன் தாஸ் 14 இடங்கள் முன்னேறி 24-வது இடமும் பிடித்துள்ளனர். பேட்டர்கள் மட்டுமின்றி பந்துவீச்சாளர்களும் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
தைஜுல் இஸ்லாம் இரண்டு இடங்கள் முன்னேறி 11-வது இடத்திலும், மெஹிதி ஹாசன் இரண்டு இடங்கள் முன்னேறி 25-வது இடத்திலும், நஹித் ராணா பத்து இடங்கள் முன்னேறி 54-வது இடத்திலும் உள்ளனர். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் தைஜுல் இஸ்லாம் மூன்று இடங்கள் முன்னேறி 29-வது இடம் பிடித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் வங்கதேச அணி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Bangladesh players have made gains in the ICC Test rankings for batters.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.