அடுத்தாண்டுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று வேலைவாய்ப்பை ஆய்வுசெய்யும் ஹைரிங் டிராக்கர் தகவல் தெரிவித்துள்ளது.
ஹைரிங் டிராக்கர் வெளியிட்ட அறிக்கையின் தரவுகளின்படி, தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகள், கடந்த ஆண்டின் பிற்பகுதியிலும் நடப்பாண்டின் தொடக்கத்திலும் இடையேயான காலத்திற்குப் பிறகு, மீண்டும் அதிகரித்து வருகிறது.
தற்போது இண்டீட் என்ற வேலைவாய்ப்புகள் வழங்கும் இயங்குதளத்தில், கிட்டத்தட்ட 70 சதவிகிதம் மென்பொருள் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளே உள்ளன.
இண்டீட் தளத்தின் தரவுகளின்படி, பல்வேறான நிறுவனங்களில் மென்பொருள் உருவாக்குநர், மென்பொருள் பொறியாளர், ஃபுல் ஸ்டாக் டெவலப்பர், சீனியர் மென்பொருள் பொறியாளர், பிஎச்பி உருவாக்குநர், நெட் டெவலப்பர்கள், சாப்ட்வேர் ஆர்கிடெக்ட்ஸ், டெவொப்ஸ் இன்ஜினியர்ஸ், தரவு பொறியாளர் மற்றும் ஃப்ரண்ட் எண்ட் டெவலப்பர்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவுக்கான இண்டீட் விற்பனைத் தலைவர் சஷி குமார் தெரிவிப்பதாவது, ``தகவல் தொழில்நுட்பத் துறைதான் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், சமீபத்திய காலாண்டுகளில் பணியமர்த்தல் மந்தநிலையைக் கண்டது.
உலகளவில் உண்டான நிச்சயமற்ற தன்மை மற்றும் பொருளாதார மாற்றங்களால் நிறுவனங்கள் மந்தநிலைக்கு ஆளாக்கப்பட்டது. ஆனால், இப்போது அலை மாறி வருகிறது. தற்போது, நிறுவனங்கள் தங்கள் பணியமர்த்தல் முயற்சிகளை தீவிரமாக அதிகரித்து வருகின்றன’’ என்று கூறுகிறார்.
இதன்மூலம், அடுத்த ஆண்டுக்குள் தொழில்துறையில் வேலைவாய்ப்புகள் 8.5 சதவிகிதம் அதிகரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.