வயநாட்டில் தொடரும் மீட்புப்பணி 
இந்தியா

வயநாட்டில் 11வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி: 152 பேர் காணவில்லை!

முகமைகள் ஒன்றிணைந்து தொடர்ந்து 11வது நாளாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

IANS

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11வது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

கடந்த ஜூன் 29-ம் தேதி கேரளத்தின் வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 400-க்கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் உயிருடன் புதைந்தனர். இந்த சம்பவத்தின் காட்சிகள் காண்போரையும், கேட்போரின் மனநிலை நெஞ்சை நசுக்கிப் பிழிவதாக இருந்தது.

இந்த பேரிடரில் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். எங்கு திருப்பினாலும் மரண ஓலங்கள். தனது அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் காட்சி சொல்லில் அடங்காதது.

தனது தாய், தந்தை, குழந்தை, உறவினர்கள் என தனது கும்பத்தினரை இழந்து பலர் முகாமில் தங்கி வருகின்றனர். பல குழந்தைகள் ஆதரவின்றி நிற்கதியாய் நிற்கின்றனர். மேப்பாடு, முண்டக்கை கிராமங்களில் கிட்டத்தட்ட 500 வீடுகள் இருந்த நிலையில், பேரழிவுக்குப் பின்னர் 50 வீடுகளும் சம்பவ இடத்தில் இல்லை.

பல்வேறு முகமைகள் ஒன்றிணைந்து தொடர்ந்து 11வது நாளாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 152 பேரின் நிலை என்ன ஆனது உயிருடன் இருக்கின்றனரா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனரா என்ற விவரங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.

மிக மோசமான இயற்கை பேரழிவின் முண்டக்கை மற்றும் புஞ்சிரிமட்டம் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் பி.ஏ. முகமது ரியாஸ் கூறுகையில், வெள்ளிக்கிழமையுடன் தேடுதல் பணி நிறைவடையும் என்றும், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இதேபோன்ற தேடுதல் பணி கிராம மக்கள் உதவியுடன் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

வயநாட்டில் சாலியாறு உற்பத்தியாகி மலப்புரம் மாவட்டம் வழியாகச் செல்லும் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று சில குழுக்கள் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. இதுவரை 78 உடல்களும், 150 உடல் உறுப்புகளும் மீட்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. வயநாடு நிலச்சரிவு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கோட்டயத்தைச் சேர்ந்த காலநிலை மாற்ற ஆய்வு நிறுவனத்திடம் பினராயி விஜயன் அரசு ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை கவின் ஆணவக் கொலை: மேலும் 15 நாள்கள் காவல் நீட்டிப்பு!

பிக் பாஸ் சீசன் 9 போட்டியாளராகிறார் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை?

ஹாட்ரிக் வெற்றியைக் கொடுப்பாரா மோகன்லால்? ஹிருதயப்பூர்வம் டிரைலர்!

காஸா மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! மீட்புப் பணியின்போது மீண்டும் தாக்குதல்!

ஆக. 28 ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி: ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் முதல்முறையாக இருதரப்பு பேச்சு!

SCROLL FOR NEXT