நட்வர் சிங் (கோப்புப் படம்) 
இந்தியா

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் காலமானார்!

கடந்த இரு வாரங்களாக உடல்நிலை சரியில்லாத நிலையில், சிகிச்சைப் பலனின்றி காலமானார்

இணையதளச் செய்திப் பிரிவு

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் காலமானதையடுத்து, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், கடந்த இரண்டு வாரங்களாக தில்லியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், நட்வர் சிங் ஆக. 10, சனிக்கிழமையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

இந்த நிலையில், நட்வர் சிங்கின் இழப்பிற்கு வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின்போது, 2004-05 காலகட்டத்தில், நட்வர் சிங் வெளியுறவுத் துறை அமைச்சராக பணிபுரிந்து வந்தார்.

பாகிஸ்தானுக்கான தூதராகப் பணியாற்றிய நட்வர் சிங், 1966 முதல் 1971 வரையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அலுவலகத்திலும் பணிபுரிந்துள்ளார்.

நட்வர் சிங் நாட்டிற்கு செய்த சேவைக்காக, அவருக்கு 1984 ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

'ஒன் லைஃப் இஸ் நாட் எனஃப்' என்ற தலைப்பில் இவரது சுயசரிதை எழுதப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT