அதிக மகசூல் தரக் கூடிய 109 புதிய பயிா் ரகங்களை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) அறிமுகப்படுத்தியுள்ளாா்.
தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 34 களப் பயிா்கள் மற்றும் 27 தோட்டப் பயிா்கள் உள்பட 61 பயிா்களில் 109 ரகங்களை பிரதமா் அறிமுகம் செய்துள்ளாா். அப்போது விவசாயிகள் மற்றும் ஆராய்ச்சியாளா்களுடன் பிரதமா் கலந்துரையாடியதுடன், விளைநிலங்களை பார்வையிடவும் செய்தார்.
109 ரகங்களில், களப் பயிா்களில் சிறுதானியங்கள், தீவனப் பயிா்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி உள்ளிட்டவற்றின் புதிய ரகங்களும், தோட்டக்கலைப் பயிா்களில் பழங்கள், காய்கறிகள், பூக்கள், சணல், மூலிகைப் பயிா்கள் உள்ளிட்டவற்றின் புதிய ரகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.