இந்தியா

அதானி குழுமத்துக்கு ஒரே நாளில் 2.4 பில்லியன் டாலர் இழப்பு!

அதானி குழுமத்துக்கு ஒரே நாளில் ரூ.20,000 கோடிக்கு மேல் இழப்பு!

DIN

அதானி குழுமத்துக்கு ஒரே நாளில் ரூ.20,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, ‘அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில், பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) தலைவா் மாதபி புரி புச் பங்குகளை வைத்திருக்கிறாா். எனவேதான், அக்குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி முறையாக செயல்படவில்லை’ என்று அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் குற்றஞ்சாட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, ‘செபி தலைவா் மாதபியுடன் எங்களுக்கும் எந்த வணிக உறவும் இல்லை’ என்று அதானி நிறுவனமும், ‘ஹிண்டன்பா்க் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றது’ என மாதபியும் மறுப்பு தெரிவித்துள்ளனா்.

இந்த நிலையில், அதானி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் திங்கள்கிழமை சரிவுடன் தொடங்கி வர்த்தக நாளின் இறுதியில் பல கோடி இழப்பை சந்தித்துள்ளது. அதானி குழுமத்துக்கு திங்கள்கிழமை வர்த்தக முடிவில் 2.43 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 20,400 கோடி.. இது அதானி குழுமத்தின் சந்தை மதிப்பில் 1 சதவிகிதம் என்று கூறப்படுகிறது.

மேலும், அதானி குழுமத்தின் அதானி என்டர்பிரைசஸ் 1.1% சரிவடைந்துள்ளது. அதானி போர்ட்ஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி பவர், அதானி வில்மர், அதானி என்ர்ஜி சொல்யூசன்ஸ்  0.6% - 4.2% வரை சரிவுடன் வர்த்தகமாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீரன் சின்னமலை நினைவு நாள்: மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

நான் கூலியில் நடிக்க ஒரே காரணம் இதுதான்: ஆமிர் கான்

SCROLL FOR NEXT