கோப்புப் படம். 
இந்தியா

கேதார்நாத் நிலச்சரிவு: மேலும் 3 சடலங்கள் மீட்பு

கேதார்நாத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

DIN

கேதார்நாத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் மலையேற்றப் பாதையில் கடந்த மாதம் பெய்த கனமழை மற்றும் மேக வெடிப்பு காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின்போது சிலர் நிலச்சரிவின் இடிபாடுகளில் சிக்கினர்.

இந்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியான லிஞ்சோலியில் இருந்து மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வியாழன் பிற்பகல் தேடுதல் நடவடிக்கையின் போது இந்த சடலங்கள் மீட்கப்பட்டதாக ருத்ரபிரயாக் மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

சடலங்கள் அருகே கிடைத்த ஆதார் மற்றும் ஏடிஎம் கார்டுகளின் அடிப்படையில் அவர்கள் சுமித் சுக்லா, கிருஷ்ணா படேல் மற்றும் லால் பகதூர் படேல் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுக்லா (21) காஜியாபாத்தில் வசிப்பவர், மற்ற இருவரின் வீடு தெரியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே லிஞ்சோலியில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாட நூல்: பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சியில் குடும்ப அட்டைகளுக்கான கடைகள்மாற்றம்

களக்காட்டில் பராமரிப்பின்றி வீணாகும் கோயில் தெப்பக்குளம்

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT