முகப்பு
இந்தியா

பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

தில்லியில் பிரதமர் மோடியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை சந்தித்தார்.

Updated On : 17 ஆகஸ்ட், 2024 at 3:23 PM
பிரமருடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு.
பகிர்:

தில்லியில் பிரதமர் மோடியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை சந்தித்தார்.

அப்போது, புதிய தலைநகரின் வளர்ச்சிக்கு ரூ.15,000 கோடி நிதியுதவி உட்பட ஆந்திரத்துக்கு வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகளுக்கு பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் நன்றி தெரிவித்தார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடர்ந்து, மாநிலத்தின் நிதி நிலை குறித்து பிரதமரிடம் விரிவாக எடுத்துரைத்த சந்திர பாபு நாயுடு, நிதி சவால்களை சமாளிக்க கூடுதல் மத்திய ஆதரவைக் கோரியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஆந்திர பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ. 15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது.

மேலும் அம்மாநிலத்தின் பின்தங்கியுள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →