படம் | எக்ஸ் தளம்
இந்தியா

விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய ஆட்டோ! உள்ளே இருந்த குழந்தைகளின் கதி..?

பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது லாரி மோதியது..

DIN

பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது லாரி மோதியதில் ஆட்டோவில் இருந்த சிறுமி உயிரிழந்தார்.

ஹைதராபாத் மாநகரின் ஹப்சிகுடா பகுதியில் சனிக்கிழமை(ஆக. 17) காலை ஏற்பட்ட கோர விபத்தில் 16 வயதான பள்ளி மாணவி உயிரிழந்தார். உயிரிழந்த மாணவி, ஹப்சிகுடா பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வந்த சாத்விகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்ட ஆட்டோவில் இருந்த மாணவியும் ஓட்டுநரும் மீட்கப்படும் காட்சி

ஹப்சிகுடா சாலையில் ள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவின் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று, ஆட்டோவின் பின்பக்கத்தில் வேகமாக மோதியுள்ளது. அதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, முன்பக்கம் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது வேகமாக மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில், பேருந்தின் அடியில் ஆட்டோ சிக்கிக்கொண்டு அப்பளம் போல் நொறுங்கியுள்ளது.விபத்து நிகழ்ந்த பகுதிக்கும் மாணவி இறங்க வேண்டிய இடத்துக்கும் இடைப்பட்ட தூரம் வெறும் 2 கி.மீ.தான் என்ற தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த மேலும் 2 பள்ளி குழந்தைகளும் காயமடைந்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து ஒஸ்மானியா பல்கலைக்கழக காவல்நிலையத்தில் பாரதிய நியாய சங்ஹிதா சட்டத்தின், 106-ஆவது பிரிவின்கீழ் வழக்குப் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT