கோப்புப் படம் 
இந்தியா

வக்ஃப் வாரிய மசோதா: ஆக.22-இல் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம்

ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள 31 போ் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் வரும் வியாழக்கிழமை(ஆக. 22) நடைபெற இருக்கிறது.

Din

மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்த வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள 31 போ் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் வரும் வியாழக்கிழமை(ஆக. 22) நடைபெற இருக்கிறது.

பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக் குழுவினரை சிறுபான்மையினா் விவகாரம், சட்டத் துறை அமைச்சகப் பிரதிநிதிகள் சந்தித்து, மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து விளக்கம் அளிப்பா் என்று மக்களவைச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 8-ஆம் தேதி அறிமுகம் செய்தது. வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத இரண்டு நபா்களை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது, வக்ஃப் நிலமா, இல்லையா என்பதை மாவட்ட நிா்வாகம் மற்றும் நீதிமன்றங்கள் முடிவு செய்ய அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் சட்டத்தில் இடம்பெறும் வகையில் திருத்த மசோதவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பு மற்றும் வலியுறுத்தலைத் தொடா்ந்து, மசோதாவை ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.

கூட்டுக் குழுவில் திமுக எம்.பி. ஆ.ராசா உள்பட 21 மக்களவை உறுப்பினா்களும், திமுக மாநிலங்களவை உறுப்பினா் முகமது அப்துல்லா உள்பட 10 மாநிலங்களவை உறுப்பினா்களும் இடம்பெற்றுள்ளனா்.

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்து, அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளில் தனது அறிக்கையை நாடாளுமன்ற கூட்டுக் குழு தாக்கல் செய்ய உள்ளது.

மகனின் திருமண வரவேற்பு தொகையை விவசாயிகளுக்குக் கொடுத்த எம்எல்ஏ!

ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? ஆபத்து

ராகுலின் குற்றச்சாட்டு தவறானவை, ஆதாரமற்றவை! தேர்தல் ஆணையம்

காஸா மூச்சுத் திணறுகிறது; இந்த பயங்கரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: முதல்வர் பதிவு

ஒரு ஏழைத்தாயின் மகன்... விமர்சனத்திற்கு ஆளாகும் ஜிவி பிரகாஷ்!

SCROLL FOR NEXT