மரத்தில் ராக்கி கட்டிய பிகார் முதல்வர் நிதீஷ் குமார் 
இந்தியா

மரத்திற்கு ராக்கி கட்டி கொண்டாடிய பிகார் முதல்வர் நிதீஷ்!

மரத்திற்கு ராக்கி கட்டி விருக்ஷா சுரக்ஷா திவாசைக் கொண்டாடினார்.

PTI

பிகார் முதல்வரும், ஜக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ் குமார் பாட்னாவில் மரத்தில் ராக்கி கட்டி ரக்ஷா பந்தனைக் கொண்டாடினார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பிகாரில் உள்ள ஒரு மரத்திற்கு ராக்கி கட்டி விருக்ஷா சுரக்ஷா திவாசைக் கொண்டாடினார்.

வடமாநிலங்களில் மிகவும் பிரபலமாக ரக்ஷா பந்தன் பண்டிக்கை கொண்டாடப்படுகிறது. அண்ணன்-தங்கைக்கு இடையிலான பாசப் பிணைப்பை பசைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.

இதுதொடர்பான அவருடைய எக்ஸ் பதிவில்,

ரக்ஷா பந்தன் என்பது சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பு மற்றும் பாசத்தின் பண்டிகையாகும். ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு மாநில மற்றும் நாட்டு மக்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியும் தேசிய தலைநகரில் பள்ளி மாணவிகளுடன் ரக்ஷா பந்தனைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

SCROLL FOR NEXT