இந்தியா

பெண் மருத்துவர் கொலை: கொல்கத்தா மருத்துவமனை முழுவதும் சிபிஐ சோதனை!

பெண் மருத்துவர் பணியாற்றிய நெஞ்சக நோய் பிரிவு அறையிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை..

DIN

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மேற்படிப்பு பயிற்சி பெற்று வந்த 31 வயதான பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பேரதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவம் நாடு தழுவிய மருத்துவா்கள் போராட்டத்துக்கு வழிவகுத்துள்ளது.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில், ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷிடம் நான்காவது நாளாக திங்கள்கிழமையும் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

விசாரணையின் ஒரு பகுதியாக, பெண் மருத்துவர் பணியாற்றிய நெஞ்சக நோய் பிரிவு அறையிலும் சிபிஐ அதிகாரிகள் தடயவியல் உள்ளிட்ட சோதனைகளை செய்ததுடன், திங்கள்கிழமை(ஆக. 19) ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகம்m முழுவதும் சோதனை நடத்தியுள்ளனர்.

பெண் மருத்துவா் பாலியல் கொலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT