கொல்கத்தா பெண் பாலியல் வழக்கு: இன்ஸ்டாகிராமில் மம்தாவுக்கு மிரட்டல்!
போலியான தகவல்களைப் பரப்பியவர் கைது
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வழக்கில் போலியான தகவல்களைப் பரப்பியவர் கைது செய்யப்பட்டார்.
கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் படத்தையும், உண்மைக்கு புறம்பான தகவல்களையும், கீர்த்தி சர்மா என்பவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிரான கருத்துகளையும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இதனையடுத்து, கீர்த்தி சர்மா மீது தல்தாலா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கீர்த்தி சர்மாவின் இன்ஸ்டாகிராமின் கணக்கு முடக்கப்பட்டது.
இந்த நிலையில், சமூக அமைதியின்மையையும், வெறுப்புணர்வையும் ஊக்குவித்ததற்காக, கீர்த்தி சர்மா கைது செய்யப்படுவதாக, காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், கீர்த்தி சர்மாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருப்பதாகவும் கூறினர்.