ஆக்ராவில் இருசக்கர வாகனத்தில் தனியாக சென்ற இளம்பெண்ணை 5 இளைஞர்கள் 2 பைக்குகளில் பின்தொடர்ந்து துரத்திச் செல்லும் காட்சி காண்போரை பதைபதைக்கச் செய்துள்ளது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தாஜ்மஹாலை பார்வையிட வந்து செல்லும் ஆக்ராவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இரவு வேளையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை அந்த இளைஞர்கள் இரண்டு பக்கமும் சூழ்ந்தவாறு சென்று, அந்த பெண்ணை தொட முயற்சிப்பதும், பாலியல் சீண்டல்களில் ஈடுபட முயல்வதையும் அவ்வழியாக சாலையில் சென்ற சிலர் தங்கள் கேமராக்களில் படம்பிடித்துச் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
நன்றி | சச்சின் குப்தா எக்ஸ் தளம்
இளைஞர்கள் பின்தொடர்ந்து துரத்தியபோதும் தனது வாகனத்தை எங்கும் நிறுத்தாமல் தொடர்ந்து சில கி.மீ. தூரம் வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்ற அந்த பெண்மணி, போக்குவரத்து காவலர் ஒருவரைக் கணட்தும் அவரிடம் உதவி கேட்டு புகார் அளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து உத்தர பிரதேச காவல்துறையினர் இளம்பெண்ணிடம் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்களை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.