சுரேஷ் கோபி (கோப்புப் படம்) X / Suressh Gopi
இந்தியா

நடிப்பதால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான்: சுரேஷ் கோபி

திரைப்படங்களில் நடிப்பதால், அமைச்சர் பதவி போனாலும் மகிழ்ச்சி என்று மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்தார்

DIN

திரைப்படங்களில் நடிப்பதன் மூலம், தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினாலுன் மகிழ்ச்சிதான் என்று கேரள அமைச்சர் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.

கேரளத்தில் நடைபெற்ற கேரள திரைப்பட வர்த்தக சபை நடத்திய நிகழ்ச்சியில் நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி கலந்து கொண்டார். திரைப்படங்களில் நடிப்பதால், தன்னுடைய அமைச்சர் பதவி பறிபோனாலும், தனக்கு மகிழ்ச்சிதான் என்று சுரேஷ் கோபி கூறியிருந்தார்.

நிகழ்ச்சியில் சுரேஷ் கோபி கூறியதாவது, `` நான் 20 முதல் 22 படங்களின் திரைக்கதையை கேட்டபிறகு, அவற்றில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இது குறித்து, திரைப்படங்களில் நடிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அனுமதி கோரினேன்; எத்தனை படங்கள்? என்று கேட்டார்.

நான் 22 என்று கூறினேன். அதைக் கேட்ட அமித் ஷா, எனது கோரிக்கை கடிதத்தை ஒதுக்கி வைத்தார். ஆனால், அதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறினார். எப்படியிருந்தாலும், நான் செப்டம்பர் 6 ஆம் தேதி படப்பிடிப்பைத் தொடங்குவேன்.

என்னுடைய அமைச்சர் பதவியின் கடமைகளை நிறைவேற்ற, படப்பிடிப்பு இடங்களுக்கு, அமைச்சகத்திலிருந்து மூன்று அல்லது நான்கு அதிகாரிகளை என்னுடன் அழைத்து வருவேன். அதற்கேற்றவாறு, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

நான் படங்களில் நடிப்பதற்காக, அவர்கள் என்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினால், நான் காப்பாற்றப்பட்டதாகத் தான் கருதுவேன். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்.

திருச்சூர் மக்கள் எனக்கு வாக்களித்து, என்னை அமைச்சராக்க அவர்கள் எடுத்த முடிவுக்கு நான் தலைவணங்கி தான், அந்த முடிவை நான் ஏற்றுக்கொண்டேன். நான் ஒருபோதும் அமைச்சராக விரும்பவில்லை’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

திருப்பூா் மக்களவை உறுப்பினா் மக்களிடம் குறைகேட்பு

கடைகளில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

தாம்பரம், விழுப்புரம் இடையே 2 மெமு ரயில்கள் பகுதியளவு ரத்து

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம்: தரவு தளத்தில் நவ.15-க்குள் விவசாயிகள் பதிவு செய்யலாம்

SCROLL FOR NEXT